search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்"

    திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    திருச்சி:

    இந்திய அளவில் இன்று முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 9 வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 300-வங்கி கிளைகள் உள்ளன. இவற்றி 1500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஊதிய உயர்வு குறித்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசின்  அலட்சிய போக்கை கண்டித்தும், 2 சதவீத  ஊதியம்  மட்டும் அளித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வை விரைவில் நிறைவேற்றக் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமராஜ் கூறியதாவது:-

    நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 31.10.17-ல் 5 வருடம் நிறை வுற்றும் இதுவரை ஊதியம் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. கடந்த 5-ந் தேதி நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டும் ஊதியம் உயர்த்தப்படுவதாக இந்திய வங்கி சங்கம், இந்திய அரசும் அறிவித்தது. வேலைப்பழு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

    திருச்சி மாவட்டத்தில் மொத்தம்  300  வங்கிகள் உள்ளன. அவற்றில் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சியில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறினார். இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×